தேசிய செய்திகள்

ஜனதா தளம்(எஸ்.) கட்சி எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் ராஜினாமா

இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனதா தளம்(எஸ்.) கட்சி எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் ராஜினாமா செய்து உள்ளனர்.

தினத்தந்தி

பெங்களூரு,

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த டெல்லி மேல்-சபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்.) கட்சி வேட்பாளர் பாரூக்குக்கு எதிராக எம்.எல்.ஏ.க்களான ஜமீர் அகமது கான், செலுவராயசாமி, இக்பால் அன்சாரி உள்ளிட்ட 7 பேரும் காங்கிரசுக்கு ஓட்டுபோட்டனர். இதைத்தொடர்ந்து கட்சி கொறடா உத்தரவை மீறியதாக 7 எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களது பதவியை பறிக்க சபாநாயகரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் கட்சி சார்பில் கர்நாடகா ஐகோர்ட்டில் வழக்கும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நடந்த டெல்லி மேல்-சபை தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளருக்கே 7 பேரும் ஓட்டுபோட்டனர். இதுபற்றி அக்கட்சி சார்பில் சபாநாயகரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரும் அடுத்தடுத்து சபாநாயகர் கோலிவாட்டை சந்தித்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தனர். அதை சபாநாயகர் ஏற்றுக் கொண்டதாக அறிவித்து உள்ளார்.

இதுபற்றி செலுவராயசாமி கூறுகையில் கட்சி இடைநீக்கம் செய்ததால் 7 பேரும் ராஜினாமா செய்து உள்ளோம். பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்காக கர்நாடகம் வந்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் நாங்கள் இன்று(ஞாயிறு) காங்கிரசில் இணைய முடிவு செய்துள்ளோம் என்றார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்