தேசிய செய்திகள்

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதி

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடுமையான சுவாசக்குழாய் தொற்று காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டு வருகிறது. அவர் குறைந்தபட்ச சுவாசம் செலுத்தப்பட்டு வருவதாகவும், உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.கிருஷ்ணா, 1999ஆம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி முதல் 2004 மே 28ம் தேதி வரை கர்நாடக முதல்-மந்திரியுமாகவும் பதவி வகித்தார். மேலும், மராட்டியஆளுநராகவும், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் வெளியுறவுத்துறை மந்திரியாகவும் பதவி வகித்தார். எஸ்.எம்.கிருஷ்ணா 2017 இல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜக வில் சேர்ந்தார் அதன் பிறகு கட்சியில் இருந்து வருகிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.எம்.கிருஷ்ணாவை கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்டோர் சந்தித்தனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை