தேசிய செய்திகள்

பாஜக தலைவர்கள் தங்களின் கார்களுக்கு காவி நிறத்தை பூசாதது ஏன்? காங்கிரஸ் கேள்வி

பா.ஜனதா தலைவர்கள் தங்களின் கார்களுக்கு காவி நிறத்தை பூசாதது ஏன்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

பா.ஜனதா தலைவர்கள் தங்களின் கார்களுக்கு காவி நிறத்தை பூசாதது ஏன்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

சி.எம். மாமா, பள்ளி கட்டிடத்திற்கு எந்த நிறத்தை வேண்டுமானாலும் பூசுங்கள். ஆனால் உடுப்பியில் பள்ளிக்கு வரும் சாலை மோசமாக உள்ளது. நாங்கள் பள்ளிக்கு வந்தால் தானே உங்களின் நிறத்தை பார்க்க முடியும். நாங்கள் எங்களால் முடிந்த அளவுக்கு சாலையை சீரமைத்துள்ளோம். நீங்கள் உங்களின் கடமையை எப்போது நிறைவேற்ற போகிறீர்கள்.

பள்ளி கட்டிடங்களுக்கு அரசியல் சாயம் பூசும் பா.ஜனதா தலைவர்கள் பதிலளிக்க வேண்டும். தங்களின் கார்களுக்கு காவி நிறத்தை பூசவில்லையே ஏன்?. எத்னை பா.ஜனதா தலைவர்கள் தங்களின் வீடுகளுக்கு காவி நிறத்தை பூசியுள்ளனர். வீடு இருக்கட்டும், குறைந்தபட்சம் வீட்டின் சுற்றுச்சுவருக்கு ஆவது காவி நிற சாயம் பூசி இருக்கிறீர்களா?.

முதலில் உங்களின் வீடுகளுக்கு காவி நிறத்தை பூசுங்கள். அதன் பிறகு பள்ளி கட்டிடங்களுக்கு அந்த நிறத்தை பூசுங்கள். குழந்தைகள், நாங்கள் காவி நிறத்தை பார்க்க வர வேண்டுமா? அல்லது படிக்க வர வேண்டுமா?. கல்வி ஆண்டில் 50 சதவீதம் முடிந்துவிட்டது. குழந்தைகளுக்கு இன்னும் பாடப்புத்தகம் வழங்கவில்லை. குழந்தைகள் எப்படி தேர்வு எழுதுவார்கள்.இவ்வாறு காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்