டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் இந்து மத வழிபாட்டு தலமான மானசா தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், பக்தர்கள் கூட்டம் அதிகரித்த நிலையில் திடீரென கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கோவில் உள்ள படிக்கட்டுகளில் பக்தர்கள் ஏற முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 25 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.