தேசிய செய்திகள்

லேசான அறிகுறி இருப்பவர்கள் சி.டி.ஸ்கேன் எடுப்பதால் எந்தப் பயனும் இல்லை - எய்ம்ஸ் இயக்குநர்

கொரோனா தொற்றை கண்டறிய சி.டி ஸ்கேன் எடுப்பது புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை உருவாக்கும் என, எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குளேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா தொற்றை கண்டறிய சி.டி ஸ்கேன் எடுப்பது புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை உருவாக்கும் என, எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குளேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், லேசான நோய்த் தொற்று அறிகுறி இருப்பவர்களும் நோய் தொற்றை கண்டறிய அடிக்கடி சிடி ஸ்கேன் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொள்வதாக தெரிவித்தார். சிடி ஸ்கேன் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

லேசான அறிகுறி இருப்பவர்கள் சி.டி.ஸ்கேன் எடுப்பதால் எந்தப் பயனும் இல்லை என ரந்தீப் குளேரியா கூறினார். சிடி ஸ்கேன் எடுப்பதால், புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுத்தார். லேசான நோய்த்தொற்று இருப்பவர்களோ அல்லது தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களோ ஸ்டிராய்டு எடுத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு