தேசிய செய்திகள்

காசியாபாத்-மேம்பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் மேம்பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானார்.

காசியாபாத்,

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் இருந்து காசியாபாத் நோக்கி நேற்றிரவு ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. காசியாபாத்தில் உள்ள பாட்டியா மோத் மேம்பாலத்தில் பேருந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பேருந்தின் டயர் வெடித்தது. அதனால், பேருந்து நிலை தடுமாறி மேம்பாலத்தில் இருந்து கீழே கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஒருவர் பலியானார், மூன்று பேர் தீவிர காயங்களுடன் மீட்கப் பட்டனர் என்று காசியாபாத் போலீசார் தெரிவித்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து கவிழ்ந்ததில் இரண்டு இருசக்கர வாகனங்கள் பேருந்தின் அடியில் சிக்கிக் கொண்டன.

விபத்து குறித்து காசியாபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக காசியாபாத் நகர எஸ்.பி நிபுன் அகர்வால் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...