தேசிய செய்திகள்

ஆகஸ்டு மாதத்தில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வசூல்

கடந்த ஆகஸ்டு மாதத்தில், ஜி.எஸ்.டி. மூலம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.

புதுடெல்லி, 

கடந்த ஆகஸ்டு மாதத்தில், ஜி.எஸ்.டி. மூலம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கிடைத்த ஜி.எஸ்.டி. வருவாயுடன் (ரூ.1 லட்சத்து 43 ஆயிரம் கோடி) ஒப்பிடுகையில், இது 11 சதவீதம் அதிகம் ஆகும். இத்தகவலை மத்திய வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்தார். கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.8 சதவீதமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

SCROLL FOR NEXT