தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் 10 நாள் ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது

கொரோனா பரவல் அதிகரிப்பால் தெலுங்கானாவில் இன்று முதல் 10 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தெலுங்கானா மாநிலத்தில் இன்று (மே 12-ந் தேதி) காலை 10 மணி முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் நேற்று நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஊரடங்கு நாட்களில் தினமும் காலையில் 6 மணி முதல் 10 மணி வரை மக்களின் அனைத்து செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படும். மற்றபடி, ஊரடங்கு நேரத்தில் எந்தெந்த சேவைகளுக்கு விதிவிலக்கு என்பது குறித்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தடுப்பூசி கொள்முதலுக்கு உலகளவில் ஒப்பந்தப்புள்ளி கோரவும் மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.