தேசிய செய்திகள்

காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதலில் 2 காவலர்கள் உள்பட 10 பேர் காயம்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 2 காவலர்கள் உள்பட 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.

தினத்தந்தி

காஷ்மீர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் இன்று காலை தீவிரவாதிகள் காவலர்கள் மீது கையெறி குண்டு ஒன்றை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் அந்த குண்டு தெருவில் விழுந்து வெடித்துள்ளது.

இதில் சிக்கி காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 2 பேர் காவலர்கள். கடந்த 4 நாட்களில் காஷ்மீரில் நடந்த 10வது தாக்குதல் இதுவாகும்.

இதனை தொடர்ந்த அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். இதற்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்