தேசிய செய்திகள்

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் கடந்த கொரோனா பரிசோதனை

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்திற்கும் கூடுதலான எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்புகள் தினமும் அதிகரித்து வருகின்றன. அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் 68 ஆயிரத்து 898 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 29 லட்சத்து 5 ஆயிரத்து 823 ஆக உள்ளது. நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் (69 ஆயிரத்து 652) நேற்று பாதிப்பு சற்றே குறைந்துள்ளது.

கொரோனாவுக்கு இந்தியாவில் நேற்று 983 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதனால், நாட்டில் இதுவரை 54 ஆயிரத்து 849 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். இதில் மராட்டியம் அதிக அளவில் பாதிப்படைந்து உள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகியவை உள்ளன.

இந்தியாவில் முதன்முறையாக கடந்த 24 மணிநேரத்தில் 10 லட்சத்திற்கு மேல் கொரோனா பரிசோதனைகள் நடந்து உள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதேபோன்று கடந்த 21 நாட்களில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் ஏறக்குறைய 100 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளது.

கடந்த 1ந்தேதி கொரோனா பாதிப்புகளில் இருந்து 10 லட்சத்து 94 ஆயிரத்து 374 பேர் குணமடைந்து இருந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த 21ந்தேதி 21 லட்சத்து 58 ஆயிரத்து 946 ஆக அதிகரித்து உள்ளது. சீராக இந்த எண்ணிக்கையானது உயர்ந்து வந்துள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்