புதுடெல்லி,
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு வேலைவாய்ப்பு, கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலுடன் இந்த மசோதா சட்டம் ஆனது. இந்த சட்டத்தின்படி ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் இச்சலுகையை பெற தகுதியானவர்கள் ஆவார்கள். அதே சமயம் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள் இந்த சலுகையை பெற முடியாது என்பன உள்ளிட்ட சில நிபந்தனைகளும் இதில் விதிக்கப்பட்டு உள்ளன.