புதுடெல்லி,
இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 691 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் பெரும்பான்மையினர் (74.53 சதவீதம்), மராட்டியம், உத்தரபிரதேசம், டெல்லி, கர்நாடகம், கேரளா, சத்தீஷ்கார், மேற்கு வங்காளம், தமிழகம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகி இருக்கிறது. மராட்டியத்தில் அதிகபட்சம் 67 ஆயிரத்து 160 பேர் கொரோனாவின் பிடியில் சிக்கினார்கள். உத்தரபிரதேசத்தில் 37 ஆயிரத்து 944 பேரும், கர்நாடகத்தில் 29 ஆயிரத்து 438 பேரும் தொற்றுக்கு ஆளானார்கள்.
இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணம் ஆவதற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 26 லட்சத்து 82 ஆயிரத்து 751 ஆக உள்ளது. இவர்களில் மராட்டியம், சத்தீஷ்கார், உத்தரபிரதேசம், கர்நாடகம், ராஜஸ்தான், தமிழகம், குஜராத், கேரளா ஆகிய 8 மாநிலங்களை சேர்ந்தவர்கள் 69.94 சதவீதத்தினர் ஆவார்கள்.