தேசிய செய்திகள்

புதுச்சேரி இளைஞர்களுக்கே 10 ஆயிரம் அரசு பணியிடங்களை வழங்க வேண்டும்; அ.தி.மு.க. கோரிக்கை

புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்களுக்கே 10 ஆயிரம் அரசு பணியிடங்களை வழங்க வேண்டும் என அ.தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுச்சேரி அ.தி.மு.க. மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திர தின உரையில், 10 ஆயிரம் அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என முதல் மந்திரி அறிவித்தார். இந்த அறிவிப்பு இளைஞர்களுக்கு இனிப்பான செய்தியாகும்.

முதல் மந்திரியின் அறிவிப்பை வரவேற்கிறோம். அதே வேளையில், 10 ஆயிரம் பணியிடங்களையும் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கே வழங்க வேண்டும். கடந்த காங்கிரஸ்-தி.மு.க. ஆட்சியின் தவறான நடவடிக்கையால், 2018ம் ஆண்டு உதவி பேராசிரியர் மற்றும் பள்ளி முதல்வர் பணியிடங்களில் வட மாநிலத்தவர் சேர்ந்துள்ளனர்.

இது புதுச்சேரி மக்களுக்கு காங்கிரஸ்-தி.மு.க. செய்த மிக பெரிய துரோகம் ஆகும். இந்த நிலை தொடராமல் இருக்க முதல்வர் ரங்கசாமி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 ஆயிரம் பணியிடங்களும் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கே கிடைத்திட அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை