தேசிய செய்திகள்

கேரளாவில் ஒரு வாரத்தில் 100% கொரோனா அதிகரிப்பு; சுகாதார மந்திரி பேட்டி

கேரளாவில் ஒரு வாரத்தில் 100% கொரோனா பாதிப்புகள் அதிகரித்து உள்ளன என சுகாதார மந்திரி பேட்டியில் கூறியுள்ளார்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,066 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 14.18% ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கேரள சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் செய்தியாளர்களிடம் இன்று அளித்த பேட்டியில், நேற்று வரை 345 ஒமைக்ரான் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. 155 பேர் குணமடைந்துள்ளனர்.

டெல்டா வகையால் எண்ணிக்கை உயருகிறது என தெரியவந்துள்ளது. கேரளாவில் டெல்டா மற்றும் ஒமைக்ரான் இரண்டு வகையும் உள்ளன. ஒரு வாரத்தில் 100% கொரோனா பாதிப்புகள் அதிகரித்து உள்ளன என கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்