உத்தரகாசி,
உத்தரகாண்டின் உத்தரகாசியில் உள்ள ஹர்சில்லில் இருந்து இமாசல பிரதேசத்தின் சிட்குல் வரை மலை ஏற்றம் செய்வதற்காக, எட்டு பேர் அடங்கிய மலை ஏற்ற வீரர்கள், 3 சமையல்காரர்களுடன் சமீபத்தில் புறப்பட்டனர்.
இவர்கள் 11 பேரும் கடந்த 18ந்தேதி திடீரென காணாமல் போயினர். அவர்களை தேடும் பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். விமானம் வாயிலாக தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது 4,500 அடி உயரத்தில் இருவர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மற்றவர்களை தேடும் பணியின் போது மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டன.
இதனையடுத்து மலையேற்ற வீர்ர்கள் 8 பேரும், உடன் சென்ற மூவர் என 11 பேரும் பலியாகி உள்ளனர் என தெரிய வந்துள்ளது. 11 பேர் உடல்களும் மீட்கப்பட்டு உள்ளன.