கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 11,042 பேருக்கு கொரோனா பாதிப்பு

கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 11 ஆயிரத்து 042 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை காரணமாக தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. அதன்படி, கர்நாடக மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், மாநிலத்தில் இன்று புதிதாக 11 ஆயிரத்து 042 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 39 ஆயிரத்து 290 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 652 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து ஒரேநாளில் 15 ஆயிரத்து 721 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கர்நாடகாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 96 ஆயிரத்து 132 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 194 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கர்நாடகாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 485 ஆக அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்