தேசிய செய்திகள்

திருப்பதியில் ஜனவரி மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் 12-ந்தேதி வெளியீடு

பக்தர்கள் அன்று மாலை 3 மணிக்கு முன்பதிவு செய்யலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி,

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஜனவரி மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளாக கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை 12-ந்தேதி காலை 10 வெளியிடப்படுகிறது.

பக்தர்கள் அன்று மாலை 3 மணிக்கு முன்பதிவு செய்யலாம். முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும். ஜனவரி மாதத்துக்கான எலக்ட்ரானிக் டிப் பதிவுகள் (குலுக்கல் முறை) மூலம் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் 12-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

பக்தர்கள் 14-ந்தேதி காலை 10 மணி வரை முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை