ஹிசார்,
அரியானா மாநிலம் ஹிசாரில் புதி மங்கல்கான் மற்றும் பீரான்வாலி கிராமங்கள் இடையே தண்ணீர் விவகாரம் தொடர்பாக மோதல் வெடித்துள்ளது. இதில் 12 பேர் காயம் அடைந்து உள்ளனர். 9 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக 300 பேர் வரையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பீரான்வாலி கிராம மக்களுக்கு தண்ணீர் வழங்க எரியில் இருந்து பொதுத்துறை சார்பில் பம்ப் அமைத்து கொடுக்கப்பட்டு உள்ளது, இதற்கு புதி மங்கல்கான் கிராம மக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்போது இருதரப்பு இடையே நேரிட்ட வாக்குவாதம் பெரும் மோதலுக்கு வழிவகை செய்தது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.