தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் கையெறி குண்டு வீச்சு: 12 பேர் காயம்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதில் 12 பேர் காயம் அடைந்தனர்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் உள்ள கக்போரா பகுதியில் காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் இன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து கையெறி குண்டுகளை வீசினர்.

இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் 12 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் பாதுகாப்பிற்காக கூடுதல் படைகள் தற்போது குவிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு படையினர் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்