தேசிய செய்திகள்

இங்கிலாந்தில் இருந்து 1,200 ஆக்சிஜன் சிலிண்டர்கள் விமானம் மூலம் இந்தியா வந்து சேர்ந்தது

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்சிஜன் நிறுவனம் இந்தியாவிற்கு 1,200 ஆக்சிஜன் சிலிண்டர்கள் விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனை சரி செய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்ய முன்வந்துள்ளன.

அந்த வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டிஷ் ஆக்சிஜன் கம்பெனி இந்தியாவிற்கு 5,000 ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்குவதாக அறிவித்திருந்தது. இதன்படி கடந்த 10 ஆம் தேதி 1,350 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தன. அதனை தொடர்ந்து இன்று 1,200 ஆக்சிஜன் சிலிண்டர்களை அந்நிறுவனம் இந்தியாவிற்கு இன்று அனுப்பி வைத்துள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்