தேசிய செய்திகள்

சித்தூர்: ஒரு கோடி மதிப்பிலான 122 செம்மரக்கட்டைகள் பறிமுதல் - 8 பேர் கைது

சித்தூர் அருகே சுமார் 1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை கடத்தி சென்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

சித்தூர்:

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து சித்தூர் வழியாக தமிழ்நாட்டுக்கு செம்மரம் கடத்துவதாக ரகசிய தகவல் வந்தது. இதனை அடுத்து போலீசார் சித்தூர் முருக்கம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக வந்த கார், லாரி மற்றும் இரு சக்கர வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அப்போது லாரியில் 122 செம்மரக்கட்டைகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். செம்மரங்களை கடத்தி வந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரக்கட்டைகளை சித்தூர் வழியாக கடத்திச் சென்று சென்னையில் விற்பனை செய்வதாக தெரிவித்தனர்.

இவர்களிடம் இருந்து 122 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதனுடைய மதிப்பு 1 கோடியே 20 லட்சம் ரூபாய் என தெரிவித்தனர்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்