தேசிய செய்திகள்

இந்தியாவில் டெல்டா வைரசுக்கு மாற்றாக ஒமைக்ரான் பரவத் தொடங்கியதா?

இந்தியாவில் டெல்டாவுக்கு மாற்றாக ஒமைக்ரான் பரவல் ஏற்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் டெல்டாவுக்கு மாற்றாக ஒமைக்ரான் பரவத் தொடங்கியிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கொரோனா, இந்தியாவில் கடந்த 2 ஆம் தேதி கண்டறியப்பட்டது. ஒமைக்ரான் டெல்டாவை விட வேகமாக பரவும் தன்மை கொண்டதால், ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மத்திய மாநில அரசுகளால் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 1,270- பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. மராட்டியத்தில் மட்டும் 450 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் டெல்டாவுக்கு மாற்றாக ஒமைக்ரான் பரவல் ஏற்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்