புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் 2021ம் ஆண்டு ஜனவரி 16ந்தேதி தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியின் வேகத்தை விரைவுபடுத்துவதற்கும், விரிவாக்குவதற்கும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இதனை தொடர்ந்து 160.58 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் இந்திய அரசு மூலமாகவும், நேரடி மாநில கொள்முதல் மூலமாகவும் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டன.
கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு போன்ற தடுப்பூசிகளை மத்திய அரசிடம் இருந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கொள்முதல் செய்கின்றன.
இந்த நிலையில், இந்தியாவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் 12.79 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன என மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.