தேசிய செய்திகள்

12-ம் வகுப்பு தேர்வில் காப்பியடிக்க உதவி: தேர்வுக்கூட கண்காணிப்பாளர் உள்பட 17 பேர் குண்டர் சட்டத்தில் கைது - உத்தரபிரதேச போலீசார் நடவடிக்கை

12-ம் வகுப்பு தேர்வில் காப்பியடிக்க உதவிய தேர்வுக்கூட கண்காணிப்பாளர் உள்பட 17 பேர் உத்தரபிரதேச போலீசாரால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

முசாபர்நகர்,

உத்தரபிரதேசத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த பிப்ரவரி 12-ந் தேதி இயற்பியல் தேர்வு நடந்தது. இதில் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் மாணவர்கள் அனைவரும் கூட்டாக காப்பி அடித்ததை பறக்கும் படை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதற்கு தேர்வுக்கூட மேற்பார்வையாளர்கள் மற்றும் கண்காணிப்பாளரே உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

எனவே இது குறித்த புகாரின் பேரில் தேர்வு மைய கண்காணிப்பாளர் யோகேந்தர் பால் மற்றும் 14 மேற்பார்வையாளர்கள் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் உயர் அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.

அதை ஏற்று யோகேந்தர் பால் உள்ளிட்ட 17 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் அஜய் சங்கர் பாண்டே நேற்று உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு