தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் 10ம் வகுப்பு வாரிய தேர்வை எழுதும் 12 வயது சிறுமி

மேற்கு வங்காளத்தில் 10ம் வகுப்பு வாரிய தேர்வை எழுத 12 வயது சிறுமிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் ஹவுரா மாவட்டத்தினை சேர்ந்த சிறுமி சைபா கதூன் (வயது 12). இவர், மேற்கு வங்காள மேனிலை கல்வி வாரியம் நடத்த உள்ள 2019ம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு தேர்வில் கலந்து கொள்வதற்காக தயாரானார். இதற்காக பள்ளி கூடத்திற்கு சென்று முறைப்படி படிக்காமல் வீட்டிலேயே படித்து வந்துள்ளார்.

அதன்பின்னர் கடந்த ஆகஸ்டில் நடந்த 10ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கான தகுதி தேர்வில் கலந்து கொண்டார். இதன் முடிவுகள் கடந்த 11ந்தேதி வெளியானது. இதில் 52 சதவீதம் மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து வெளிநபர் தேர்வாளராக அவர் 10ம் வகுப்பு வாரிய தேர்வினை எழுதுகிறார்.

இந்த தேர்வை எழுதுவதற்கு குறைந்தபட்ச வயது தகுதி 14 ஆகும். கடந்த 1990ம் ஆண்டு தொடக்கத்தில் வெளிநபர் தேர்வாளர் ஒருவர் குறைந்தபட்ச வயதுக்கு முன் தேர்வு எழுதினார். இந்த நிலையில், கடந்த 20 வருடங்களுக்கு பின்னர் 12 வயது நிறைந்த சிறுமி கதூன் இந்த தேர்வை எழுத தகுதி பெற்றுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு