தேசிய செய்திகள்

அனில் அம்பானி நிறுவனத்தின் 13 வங்கிக்கணக்குகள் முடக்கம்

கடந்த மாதம் அனில் அம்பானிக்கு சம்மன் அனுப்பியும், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை

தினத்தந்தி

புதுடெல்லி,

அனில் அம்பானிக்கு சொந்தமான ஆர்-இன்ப்ரா நிறுவனம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுமான திட்டங்களுக்கான பொது நிதியை மோசடி செய்து வெளிநாட்டுக்கு அனுப்பியதாக வழக்கு தொடரப்பட்டு உள்ளது.மும்பையில் உள்ள போலி நிறுவனங்களுக்கு துணை ஒப்பந்தம் வழங்குவதாக கூறி இந்த மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக ஆர்-இன்ப்ரா நிறுவனத்துக்கு எதிராக அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. விசாரணையின் ஒரு பகுதியாக ஆர்-இன்ப்ரா நிறுவனத்துக்கு சொந்தமான 13 வங்கிக்கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இந்த கணக்குகளில் உள்ள ரூ.54.82 கோடியும் முடக்கப்பட்டு உள்ளது. முன்னதாக இந்த வழக்கில் கடந்த மாதம் அனில் அம்பானிக்கு சம்மன் அனுப்பியும், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி