தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் திருமண கோஷ்டியினர் மீது டிரக் மோதி விபத்து: 13 பேர் பலி, 18 பேர் காயம்

ராஜஸ்தானில் ஊர்வலமாக திருமண கோஷ்டியினர் மீது டிரக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 13 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கார் மாவட்டத்தில் உள்ள நிம்பஹரே பகுதியி இருந்து பன்ஸ்வரா பகுதிக்கு திருமண நிகழ்ச்சிக்காக ஏராளமானோர் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். இவர்கள் அங்குள்ள ராம்தேவ் கோவில் அருகே உள்ள மாநில நெடுஞ்சாலை- 113 வழியாக சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த டிரக் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஊர்வலத்திற்குள் புகுந்தது.

இந்த கோர விபத்தில், 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். படுகாயம் அடைந்த 18 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விபத்தில் 13 பேர் பலியான சம்பவம் தனக்கு மிகுந்த மன வேதனையை அளித்திருப்பதாக முதல் மந்திரி அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு