தேசிய செய்திகள்

இஸ்ரேல் நாட்டில் இருந்து 1,300 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலம் இந்தியா வருகை

இஸ்ரேலில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலமாக 1,300 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனை சரி செய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் வெளிநாடுகளில் இருந்தும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்ய முன்வந்துள்ளன.

அந்த வகையில் இஸ்ரேல் நாட்டில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலமாக 1,300 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 400 சுவாசக் கருவிகள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இஸ்ரேலில் இருந்து இரு தினங்களுக்கு முன் 360 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 3 ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு