தேசிய செய்திகள்

நீண்ட காலமாக விடுப்பில் உள்ள 13 ஆயிரம் பணியாளர்களை நீக்க இந்திய ரயில்வே முடிவு

உரிய அனுமதியின்றி நீண்ட காலமாக விடுப்பில் உள்ள 13 ஆயிரம் பணியாளர்களை நீக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய ரயில்வே துறையில் நாடு முழுவதிலுமாக சுமார் 13 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலரும் பணிக்கு வராமல் ஏமாற்றி வரும் நிலை தொடர்ந்துள்ளது. சட்டவிரோதமாக விடுப்பு எடுத்ததுடன் அதற்கான ஊதியங்களையும் பெற்று வந்துள்ளனர். இவர்களை கணக்கு எடுப்பு நடத்தி அடையாளம் காணும்படி மத்திய ரயில் துறை மற்றும் நிலக்கரி துறையின் அமைச்சரான பியூஷ் கோயல் உத்தரவிட்டிருந்தார்.

இதன் பெயரில், சுமார் 13,000 பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மீது விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், பணிக்கு வராமல் நீண்ட காலம் முறைகேடாக விடுப்பில் உள்ளவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு பணி நீக்கம் செய்யும் முறை துவங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பாளர்கள், நீண்ட கால விடுப்பில் உள்ள ஊழியர்களை கண்டறிந்து தகுந்த நடைமுறைகளின் படி பணி நீக்கம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்