தேசிய செய்திகள்

133-வது பிறந்தநாள்: அம்பேத்கர் சிலைக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி மரியாதை..!

அம்பேத்கர் சிலைக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி மரியாதை செலுத்தினர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

சட்டமேதை டாக்டர் அண்ணல் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் 133-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் அம்பேத்கருக்கு சிலை, உருவபடத்திற்க்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து சோனியா காந்தி, ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, என்சிபி தலைவர் சரத் பவார், மத்திய மந்திரிகள் உள்ளிட்ட எம்.பி.க்கள் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு