தேசிய செய்திகள்

ஒடிசாவில் புதிதாக 1,384 பேருக்கு கொரோனா தொற்று: 9 பேர் பலி

ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 பேர் உயிரிழந்தனர்.

புவனேஷ்வர்,

ஒடிசா மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிதாக 9 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 216-ஆக அதிகரித்துள்ளது.

9 உயிரிழப்புகளில் 6 பேர் கஞ்சம் பகுதியை சேர்ந்தவர்கள். புரி, ஜெய்ப்பூர், கோர்தா பகுதியை சேர்ந்த தலா ஒருவர் உயிரிழந்தனர்.

கஞ்சம் பகுதியில் அதிகபட்சமாக 288 பேரும், கோர்தா பகுதியில் 201 பேரும், கட்டாக் பகுதியில் 121 பேரும், சாம்பல்பூர் பகுதியில் 82 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவில் 14,350 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 23,073 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.