தேசிய செய்திகள்

உத்தரகாண்ட்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

உத்தரகாண்டில் பள்ளத்தாக்கு ஒன்றில், தனியார் பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.

தினத்தந்தி

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசியில் உள்ள ஜான்கிசாட்டியிலிருந்து விகாஸ் நகர் பகுதியை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றது.

பேருந்து டாம்டா பகுதி அருகில் உள்ள பள்ளத்தாக்கு அருகே சென்றபோது தீடிரென பேருந்து கவிழ்ந்தது. தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் பலி எண்ணிக்கை தற்போது 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். டேராடூனில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மீட்புப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரகாண்ட் மாநில முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத் உத்தரவிட்டார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு