தேசிய செய்திகள்

"ஒரே மாதத்தில் 140 கோடி ரூபாய் உண்டியல் வசூல்" - திருப்பதி தேவஸ்தானம் தகவல்

திருப்பதியில் முதல்முறையாக ஒரே மாதத்தில் 140 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.

தினத்தந்தி

திருப்பதி,

திருப்பதி திருமலையில் நடைபெற்ற தொலைபேசி மூலமாக பக்தர்கள் குறை கேட்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தேவஸ்தான தலைமைச் செயல் அலுவலர், அதனைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், கடந்த ஒரு மாதத்தில் 22 லட்சத்து 22 ஆயிரம் பேர் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளதாகவும், ஒரேமாதத்தில்140 கோடியே 34 லட்ச ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்தாண்டிற்காக பிரமோற்சவம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளதாக கூறிய அவர், அன்றைய தினம் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அரசு சார்பாக கோயிலுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

திருப்பதியில் முதல்முறையாக ஒரே மாதத்தில் 140 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு