பின்னர் இது பயங்கர வன்முறையாக மாறியது. ஒருகட்டத்தில் இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் ஒரு போலீஸ்காரர், ஒரு பத்திரிகையாளர் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தார். இதனால் பதற்றம் நிலவியது. இதனையடுத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசு பைன்சா நகரில் 144 தடை உத்தரவை அமல்படுத்தியது. மேலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே தெலுங்கானா சம்பவம் குறித்தும், அங்கு தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும் உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று மத்திய இணை மந்திரி கிஷன்ரெட்டியிடம் கேட்டறிந்தார்.
இந்த தகவலை கிஷன்ரெட்டி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். முன்னதாக தெலுங்கானா போலீஸ் டி.ஜி.பி. மகேந்தர் ரெட்டியை தொடர்புகொண்ட கிஷன்ரெட்டி, வன்முறையாளர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.