ஜெய்பூர்,
ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று மாநிலம் முழுவதும் 1,450 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,227 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 13 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,043 ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் தற்போது 14,091 பேர் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 65,093 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.