தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 14,888 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 14,888 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை தினமும் அதிகரித்தே வருகிறது. வயது வித்தியாசம் இல்லாமலும், எந்தவித பாகுபாடுமின்றியும் எல்லாரும் கொரோனா தொற்று ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 14,888 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,18,711 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் மாநிலம் முழுவதும் இன்று மேலும் 7,637 பேர் குணமடைந்துள்ளனர்.இதனால் மாநிலத்தில் முழுவதும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,22,427 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று மேலும் 295 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 1,72,873 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்