கர்நாடகாவின் யாத்கீர் மாவட்டத்தில் சோராபூர் நகரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜா வெங்கடப்பா நாயக் மற்றும் ஜி.எஸ். பாட்டீல் ஆகியோரது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு வரும்படி பாரதீய ஜனதா உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் அழைப்பு விடுத்தனர். ஆனால் அவர்கள் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் கற்களை கொண்டு வீசி பாரதீய ஜனதா உறுப்பினர்களை தாக்கினர்.
இதற்கு பதிலடியாக பாரதீய ஜனதாவினரும் ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறை சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் இலக்காகினர்.
இதனை தொடர்ந்து அடையாளம் தெரியாத 5 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். நிலைமை அமைதியாக மற்றும் கட்டுக்குள் உள்ளது என போலீசார் கூறியுள்ளனர்.