தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் புழுதி புயல் மற்றும் கனமழையால் 15 பேர் பலி

ராஜஸ்தானில் புழுதி புயல் மற்றும் கனமழையால் 15 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர்.

ஜெய்பூர்,

ராஜஸ்தானில் அதிதீவிர புழுதி புயல் மற்றும் அதனை தொடர்ந்து பெய்த கனமழையால் பல இடங்களில் வீடுகள் இடிந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன. மரங்கள் வேரோடு சரிந்து விழுந்தன.

இதுபற்றி பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரண செயலாளர் ஹேமந்த் குமார் கெரா செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இன்று காலை 3 மணிவரை பரத்பூர் பகுதியில் 8 பேர், தோல்பூர் மற்றும் ஆல்வார் பகுதிகளில் தலா 3 பேர் மற்றும் ஜுன்ஜுனு பகுதியில் ஒருவர் என மொத்தம் 15 பேர் பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை உயர கூடும் என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து நிவாரண மற்றும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. முதல் மந்திரி வசுந்தரா ராஜே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...