தேசிய செய்திகள்

டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 1.6 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்

டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 1.6 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன என அரசு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 738 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.

அவர்களில் 1,30,487 பேர் முதல் டோசும், 30,251 பேர் 2வது டோசும் போட்டு கொண்டனர். இதுவரை மொத்தம் 82 லட்சத்து 12 ஆயிரத்து 158 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன என தெரிவித்து உள்ளது.

இதுபோக இன்னும் 2 நாட்களுக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. அவற்றில் 2.68 லட்சம் கோவேக்சின் மற்றும் 2.10 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...