தேசிய செய்திகள்

அவுரங்காபாத்தில் 162 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுப்பு..!

அவுரங்காபாத்தில் 162 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

அவுரங்காபாத்,

சி.ஆர்.பி.எஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

சட்டவிரோத மாவோயிஸ்டுகளுக்கு எதிராக சிஆர்பிஎஃப் மற்றும் பிகார் காவல்துறையின் மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகளால், மாநிலம் இயல்பு நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது.

முன்னதாக மாவோயிஸ்டுகளின் கோட்டையாக கருதப்பட்ட பகுதிகளில், மாவோயிஸ்டுகளால் புதைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை அகற்றுதல் மற்றும் அவசரமாக தப்பிச் செல்லும் போது அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை மீட்கும் நோக்கத்துடன் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

ஜனவரி 27 ஆம் தேதி ஔரங்காபாத் லதுய்யா பஹாட் பகுதியில் சிஆர்பிஎஃப் மற்றும் பிகார் காவல்துறை நடத்திய இதுபோன்ற ஒரு தேடுதல் மற்றும் அழிப்பு நடவடிக்கையில், 13 நாட்டு வெடிகுண்டுகள் ஆரம்பத்தில் கண்டறியப்பட்டன. அவற்றை அந்த இடத்திலேயே அழித்துவிட்டு மேலும் நடவடிக்கையைத் தொடர்ந்தனர்.

அப்போது ஒரு குகைக்கு அருகில் சென்று குகையை ஸ்கேன் செய்தபோது, ஒவ்வொன்றும் சுமார் ஒரு கிலோ எடையுள்ள 149 நாட்டு வெடிகுண்டுகள் மீட்கப்பட்டன. பின்னர் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடித்து அந்த நாட்டு வெடிகுண்டுகளையும் அவர்கள் அழித்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை