தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் கடந்த 6 மாதங்களில் 162 தொண்டர்கள் கொலை; பா.ஜ.க. குற்றச்சாட்டு

மேற்கு வங்காளத்தில் கடந்த 6 மாதங்களில் 162 தொண்டர்கள் கொலை செய்யப்பட்டு உள்ளனர் என பா.ஜ.க. குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.

தினத்தந்தி

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தலைவர் சமிக் பட்டாச்சார்யா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, கடந்த 6 மாதங்களில் எங்களுடைய கட்சியை சேர்ந்த 162 தொண்டர்கள் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் பல்வேறு இடங்களிலும் பா.ஜ.க. தொண்டர்களை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கொடிகளை ஏந்த வலியுறுத்தி கட்டாயப்படுத்துகின்றனர். இதனை கண்டித்து எங்களுடைய மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் நாளை அனைத்து எம்.பி.க்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என கூறியுள்ளார்.

டெல்லியின் ராஜ்காட் மற்றும் வங்காளம் முழுவதும் இந்த போராட்டம் நடத்தப்படும். கொலை செய்யப்பட்ட தொண்டர்களின் கட்அவுட்டுகள் மாநிலம் முழுவதும் வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்