தேசிய செய்திகள்

சிபிஐ-யில் 1,673 பணியிடங்கள் காலியாக உள்ளன - ஜிதேந்திர சிங்

நாட்டின் முதன்மை புலனாய்வு அமைப்பான சிபிஐ-யில் உள்ள 7,295 பணியிடங்களில், 1,673 பணியிடங்கள் காலியாக உள்ளன.

தினத்தந்தி

புதுடெல்லி,

மக்களவையில் மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியதாவது:-

நாட்டின் முதன்மை புலனாய்வு அமைப்பான சிபிஐ-யில் உள்ள 7,295 பணியிடங்களில், 1,673 பணியிடங்கள் காலியாக உள்ளன.குற்றங்களை விசாரிக்க பொதுத்துறை வங்கிகள்,உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல துறைகளில் இருந்து தகுந்த நபர்களை பரிந்துரைக்க சிபிஐ கேட்டுக்கொண்டுள்ளது.

2019 முதல் 2022 நவம்பர் வரை மத்தியஅரசு மற்றும் அரசியல்சான அமைப்புகள் மீது அவதூறு கருத்து பதிவிட்டதாக 15 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது. 28 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை