புதுடெல்லி,
கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிடம் இன்னும் பயன்படுத்தப்படாத மற்றும் கையிருப்பில் 1.70 கோடி கொரோனா தடுப்பூசிகள் உள்ளன என தெரிவித்து உள்ளது.
மத்திய அரசிடம் இருந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 38 கோடியே 18 லட்சத்து 97 ஆயிரத்து 610 கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு உள்ளன. இன்னும் 23.80 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன.
இதுவரை வீணானது உள்பட மொத்தம் 36 கோடியே 48 லட்சத்து 77 ஆயிரத்து 756 கொரோனா தடுப்பூசிகள் (இன்று காலை 8 மணி நிலவரப்படி) எடுத்து கொள்ளப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.