அகமதாபாத்,
குஜராத் மாநிலத்தில் பாவ்நகர்- அகமதாபாத் நெடுஞ்சாலையில் உள்ள பாவல்யாலி பகுதியில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி, நடு ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 19 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 7 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து பற்றிய முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். லாரியில் இருந்த நூற்றுக்கணக்கான சிமெண்ட் மூட்டைகள் சாலையோரம் குவிந்து கிடக்கின்றன. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.