புதுடெல்லி,
டெல்லி, உத்தரபிரதேசம்,ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பனிமூட்டம் கடுமையாக காணப்படுகிறது. பனி மூட்டத்தால் சில மீட்டர் தொலைவு தூரமே கண்ணுக்கு புலப்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் சென்றதை காண முடிந்தது.
பனிமூட்டம் காரணமாக 19 ரெயில்கள் தாமதமாக வருவதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. டெல்லி, உத்தரபிரதேசம் ஆகிய இடங்களில் இன்று காலை வெப்ப நிலை 3 முதல் 4 டிகிரி செல்சியசாக பதிவானது. டெல்லியில் காற்றின் தரமும் ஓரளவு மேம்பட்டுள்ளது.