தேசிய செய்திகள்

சத்தீஷ்காரில் கடும் துப்பாக்கி சண்டை; பாதுகாப்பு படை அதிரடி நடவடிக்கையில் 9 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 9 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சுக்மா,

கிஸ்தாராம் காவல் நிலையத்திற்கு உள்பட்ட சாக்லார் கிராமத்தில் பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை வெடித்துள்ளது. சண்டையில் இரண்டு போலீசார் உயிரிழந்துள்ளனர் எனவும் 9 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காட்டுப்பகுதியை சுற்றி வளைத்துள்ள பாதுகாப்பு படைகள் தொடர் சண்டையில் ஈடுபட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்கள் எண்ணிக்கை உயரலாம் எனவும் கூறப்படுகிறது. என்கவுண்டர் நடைபெற்ற இடத்திலிருந்து மேலும் தகவல்கள் வெளியாகவில்லை.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்