தேசிய செய்திகள்

ரெயில்வேயில் 1 லட்சம் காலி பணியிடங்களுக்கு 2 கோடி பேர் விண்ணப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு

ரெயில்வேயில் 1 லட்சம் காலி பணியிடங்களுக்கு தற்போது வரை 2 கோடி பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ரெயில்வே வாரியம் குரூப் சி பிரிவில் தொழில்நுட்பம் மற்றும் உதவி ரெயில் பைலட் பணிக்கு 17 ஆயிரத்து 849 பேர், பல்வேறு தொழில்நுட்ப பணிக்கு 9 ஆயிரத்து 170 பேர், குரூப் டி பிரிவில் 62 ஆயிரத்து 907 பேர் மற்றும் பாதுகாப்பு படை பிரிவுக்கு 9 ஆயிரத்து 500 பேர் என சுமார் 1 லட்சம் காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

இதுவரை இந்த பணியிடங்களுக்கு 2 கோடிக்கும் மேல் விண்ணப்பங்கள் வந்துள்ளன. உதவி பைலட் பணிக்கு மட்டும் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில் விண்ணப்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளது.நாடு முழுவதும் இந்த தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 15 மொழிகளில் அச்சிடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை