தேசிய செய்திகள்

2 நாள் பயணமாக புதின் 4–ந் தேதி இந்தியா வருகை

2 நாள் பயணமாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் 4–ந் தேதி இந்தியா வர உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், 2 நாள் பயணமாக 4ந் தேதி இந்தியாவுக்கு வருகிறார். அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததன் தாக்கம் பற்றி இருவரும் விவாதிக்கிறார்கள்.

மேலும், பல்வேறு பிராந்திய, சர்வதேச பிரச்சினைகள் பற்றியும் ஆலோசனை நடத்துகிறார்கள். ராணுவம், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, விண்வெளி, சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றியும் பேச்சு நடத்துகிறார்கள்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் புதின் சந்தித்து பேசுகிறார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது