புதுடெல்லி,
கொரோனா நோய்த்தொற்றை தடுக்கும் முயற்சியாக உலகம் முழுவதும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி தடுப்பூசி போடும் பணி முன்னுரிமை அடிப்படையில் தொடங்கியது. தற்போது 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நாடு முழுவதும் இதுவரை 85 கோடியே 60 லட்சத்து 81 ஆயிரத்து 527 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 63 கோடியே 8 லட்சத்து 31 ஆயிரத்து 85 பேர் ஒரு டோஸ் போட்டுக்கொண்டவர்கள் ஆவார்கள். 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டோர் எண்ணிக்கை 22 கோடியே 52 லட்சத்து 50 ஆயிரத்து 442 ஆகும்.
நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் 68 லட்சத்து 42 ஆயிரத்து 786 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு சார்பில் இதுவரை 82.57 கோடி தடுப்பூசிகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.