ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்திற்குட்பட்ட முனிவார்ட் என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர், பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அப்பகுதியில் மேலும், பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என நம்பப்படுவதால், என்கவுண்டர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து வெடிபொருட்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. என்கவுண்டரையடுத்து, அப்பகுதியில் மொபைல் இண்டெர்னெட் சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.